பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் எவிக்ட்டாக போறது இவர்தானா.. பரபரக்கும் நாமினேஷன்.. தப்பித்த மொட்டை!

0
29

தகுதியற்றவர்கள்

தகுதியற்றவர்கள்

ஆனால் அதற்கான புராசஸ்கள் நடைபெற்று வந்தன. கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது, டச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்களை கொண்டிருக்காத போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள் என 8 பேரை நாமினேட் செய்ய வேண்டும் என அறிவித்தார் பிக்பாஸ்.

முதல் நாமினேஷன்

முதல் நாமினேஷன்

அதன்படி, சனம் ஷெட்டி, ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, ரம்யா பாண்டியன் ஆகிய 8 பேர் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் முதல் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது.

தலா இரண்டு பேர்

தலா இரண்டு பேர்

இதற்கான புரமோ இன்று வெளியாகியுள்ளது. அதன்படி கன்ஃபெஷன் ரூமிற்கு போட்டியாளர்களை அழைத்த பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்களின் பெயர்களை கூறி ஒவ்வோரு ஹவுஸ்மேட்டும் தலா இரண்டு பேரை நாமினேட் செய்யவேண்டும் என கூறுகிறார்.

அதிகபட்சமாக சனம்

அதிகபட்சமாக சனம்

இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று சக ஹவுஸ்மேட்டுகள் இருவரை நாமினேட் செய்கின்றனர். அதில் அதிகபட்சமாக சனம் ஷெட்டியைதான் ஹவுஸ்மேட்ஸ்கள் நாமினேட் செய்கின்றனர்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அவருக்கு அடுத்தப்படியாக நடிகை ஷிவானி நாராயணனை ஹவுஸ்மேட்டுகள் நாமினேட் செய்கின்றனர். இதன் மூலம் சனம் ஷெட்டியும், ஷிவானி நாராயணனும் எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. சனம் ஷெட்டியை நடிப்பதாக காரணம் கூறியுள்ள ஹவுஸ்மேட்ஸ் ஷிவானி மிங்கிள் ஆகவில்லை என்று கூறியுள்ளனர்.

எரிச்சல்படுத்தும் நபர்

எரிச்சல்படுத்தும் நபர்

சனம் ஷெட்டி, அனிதா சம்பத்துக்கு அடுத்தப்படியாக சின்ன சின்ன பிரச்சனைகளை எல்லாம் ஊதி பெருசாக்குகிறார். தேவையில்லாமல் வாக்குவாதம் செய்கிறார். இதனால் ஏற்கனவே ரசிகர்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் அனிதாவுக்கு அடுத்தப்படியாக எரிச்சலை ஏற்படுத்தும் நபர் என்ற பெயரை பெற்றுவிட்டார்.

முதலில் வெளியேற போவது?

முதலில் வெளியேற போவது?

இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற சனம் ஷெட்டிக்குதான் அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்றிருந்த சனம் ஷெட்டியின் காதலரான தர்ஷன் 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

சுரேஷ் எஸ்கேப்

சுரேஷ் எஸ்கேப்

ஆனால் தன்னுடைய நியாயத்தை எடுத்து சொல்லுவேன், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறி வந்த சனம் ஷெட்டி முதல் வாரமே வெறுப்பை சம்பாதித்து எவிக்ஷன் லிஸ்ட் வரை வந்துவிட்டார். பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என தெரிகிறது.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here