நான் உங்கிட்ட வேட்டி கேட்டேன்.. மொட்டையை விட்ட ரியோ.. வச்சு விளாசிய வேல்முருகன்.. இது போதும்!

0
35
<!–

–>

கொடுப்பது போல கொடுத்து

கொடுப்பது போல கொடுத்து

ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்காக வேல்முருகனுக்கு வேட்டிக் கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி, அதை வைத்தே வேல்முருகனிடமும் சண்டையை உருவாக்கி விட்டார். என்ன பண்ணா வெளியே தெரிவோம். என்ன பண்ணா மத்தவங்கள வெளியேத்தலாம் என கிரிமினல் மைண்ட் உடன் விளையாடி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

<!–

–>

காண்டான வேல்முருகன்

காண்டான வேல்முருகன்

டிவியில் ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜீத்திடம் வேல்முருகனுக்கு வேட்டி கொடுத்தது பற்றி ஏளனமாக பேசியது. ரியோ ராஜை உசுப்பேற்றி விட்டு வேலை காட்டியது. அனிதா சம்பத் பற்றி அவதூறாக பேசியது உள்ளிட்டவற்றை பார்த்த வேல்முருகன், உண்மையிலேயே சுரேஷ் மீது செம காண்டாகி விட்டார்.

<!–

–>

வெளியே வந்த உடனே

வெளியே வந்த உடனே

சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே வந்த உடனே, டிவியில் அவர் பண்ண திருவிளையாடல்களை எல்லாம் பிக் பாஸ் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார். ஆட்டம் இனிமே தான் ஆரம்பம் என சனம் ஷெட்டி சுரேஷ் சக்கரவர்த்திக்கு புரியும் படி சொல்லிவிட்டார். அதன் பின்னர், சுரேஷ் சக்கரவர்த்தி மாட்டிக்கிட்டோமே என்கிற ரீதியில் யாரிடமும் சிக்க விரும்பாமல் எஸ்கேப் ஆக முயற்சி செய்தார்.

<!–

–>

வெளுத்த வேல்முருகன்

வெளுத்த வேல்முருகன்

வெறிப்பிடித்த வேங்கை என பிக் பாஸ் வீட்டுக்குள் சுரேஷ் சக்கரவர்த்தியை உண்டு இல்லை என பண்ணிவிடுவது போல, துரத்தி துரத்தி கேள்விக் கேட்டு நாக்கை பிடிங்கினார் வேல்முருகன். நான் உங்கிட்ட வேட்டிக் கேட்டேனா? பெரிய மனுஷன்னு பார்த்தா சல்லித் தனமான வேலையெல்லாம் செய்ற என்கிற அளவுக்கு இறங்கி அடித்தார்.

<!–

–>

கிளாஸ் எடுத்த சனம்

கிளாஸ் எடுத்த சனம்

எங்கே முன்னதாக பரவிய தகவல் போல வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தியை அடித்து விடுவாரா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சினாலும், அவருடைய போர்ஷன் எபிசோடில் செம டாப் நாட்சாக இருந்தது. அதன் பின்னர், அவரை அறைக்குள் அழைத்துச் சென்று பிக் பாஸ் கேம் குறித்து கிளாஸ் எடுக்கும் காட்சியெல்லாம் அன்சீனில் காட்டி உள்ளனர்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here