நடிச்சது கொஞ்சம்தான்.. இந்த நடிகைகளிடம் இவ்வளவு சொத்துக்களா? வருமான வரித்துறை விசாரிக்க முடிவு!

0
30
<!–

–>

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

<!–

–>

சட்டவிரோத சொத்து

சட்டவிரோத சொத்து

போலீஸ் விசாரணையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததும் தெரியவந்துள்ளது. இதுபற்றி அமலாக்கத்துறையினர் நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.

<!–

–>

இவ்வளவு சொத்து

இவ்வளவு சொத்து

அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், நடிகைகள் 2 பேரும் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகளவில் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. குறைவான படங்களில் நடித்த இவர்களுக்கு இவ்வளவு சொத்து வந்தது எப்படி அவர்கள் ஆச்சரியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

<!–

–>

குறைவான சம்பளம்

குறைவான சம்பளம்

நடிகை சஞ்சனா கல்ராணி, தான் நடித்தப் படங்களில் குறைவான சம்பளமே வாங்கியுள்ளார். அவர் பெங்களூர் நகரில் மட்டுமே 10 வீடுகளை வாங்கி இருக்கிறார். குறைவான சம்பளம் வாங்கியவர் எப்படி இவ்வளவு சொத்துகளை சேர்த்தார் என்பது கேள்வியாக உள்ளது. இதையடுத்து இந்த வழக்கை வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

<!–

–>

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு, அமலாக்கத்துறையினர் முழு விவரங்களையும் அளித்துள்ளனர். இதையடுத்து, நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரிடமும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here