சட்டையை கழட்டி.. நடுக்கடலில் சரக்கு பார்ட்டி.. ஜல்சாவா வாழ்ந்துட்டு இங்க வந்து ஒழுகும் பாலாஜி!

0
24
<!–

–>

சுயநலத்துக்காக

சுயநலத்துக்காக

தனது சொந்த சுயநலத்துக்காக பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் சொந்தக் கதை சோகக் கதை சொல்லும் போது, தனது பெற்றோர்களை குடிகாரர்கள் என்றும், தன்னை சரியாக வளர்க்கவில்லை என்றும் அழுது ஒழுகினார். அதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்களும், இந்த பாடி பில்டர் குள்ள இப்படியொரு பச்சப் புள்ளையா என ஏமாந்தனர்.

<!–

–>

ரொம்ப யோக்கியம்

ரொம்ப யோக்கியம்

பாலாஜி முருகதாஸ் கேடித்தனமாக தனது இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், போட்டோக்கள் என எல்லாத்தையும் டெலிட் செய்துவிட்டுத் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால், பாலாஜி முருகதாஸின் டுபாக்கூர் கதையை கேட்டு கடுப்பான அவருக்கு நெருங்கியவர்கள், இணையத்தில் அவரது அயோக்கியத்தனங்களை அவிழ்த்து விட்டு வருகின்றனர். பீர் ஊத்திக் குளிக்கும் டிக்டாக் வீடியோ போட்டோக்களை வெளியிட்டு பாலாஜியின் முகமூடியை கிழித்தனர்.

<!–

–>

சொன்னதெல்லாம் பொய்

சொன்னதெல்லாம் பொய்

அம்மா அப்பா பற்றி எல்லாம் பாலாஜி முருகதாஸ் சொன்னது எல்லாம் மகா மட்டமான பொய் என்றும், சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு பெத்தவங்கள பத்தி தப்பா பேசுறாரு என பாலாஜி முருகதாஸின் ஜிம் கோச்சே வெளியிட்ட ரகசியங்களை கேட்ட ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள்.

பெண்ணுடன் நீச்சல் குளத்தில்

மேலும், இளம் பெண் ஒருவருடன் நீச்சல் குளத்தில் பாலாஜி முருகதாஸ் செய்த லீலைகள் எல்லாம் வீடியோவாக கசிந்து வைரலாக பாலாஜி முருகதாஸின் இமேஜ் முழுவதும் சுக்கு நூறாக விழுந்து டேமேஜ் ஆனது. இவரும் மகா குடிகாரர் என்பதை புட்டு புட்டு வைத்துள்ளார் ஜோ மைக்கேல்.

<!–

–>

ரகிட ரகிட ரகிட

ரகிட ரகிட ரகிட

பிக் பாஸ் வீட்டில் சனம் ஷெட்டியுடன் மோதலில் ஈடுபட்ட பாலாஜி முருகதாஸ், அவரை வெறுப்பேற்றும் விதமாக தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற ரகிட ரகிட ரகிட பாடலை பாடி தனது மோசமான ஆட்டிட்யூடை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏற்பட்ட டுபாக்கூர் போட்டி சண்டை தான் ஹைலைட்டே.

<!–

–>

நாசுக்கா நாக்கைப் பிடுங்கிய கமல்

நாசுக்கா நாக்கைப் பிடுங்கிய கமல்

உங்களை யாராச்சும் சும்மா ஊசி போட்டு உடம்பை ஏத்திட்டான்னு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும், எனக்கு ஹார்ட் பிரேக் குத்தப் போறீங்களா என கையை நீட்டியும் நாசுக்கா பாலாஜி முருகதாஸின் நாக்கைப் பிடுங்கி வீக்கெண்டில் விளாசி தள்ளி இருந்தார் கமல்ஹாசன்.

<!–

–>

சரக்கு ஓவராகி விபத்து

சரக்கு ஓவராகி விபத்து

தனது அப்பா மற்றும் அம்மா குடிகாரர்கள் என்றும் தான் ரொம்ப ஒழுங்கு என்றும் பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் மல்க பேசி, அனைவரது கைதட்டுக்களையும் வாங்கிய பாலாஜி முருகதாஸ், சரக்கு ஓவராகி காரை விட்டு மோதி, Swiggy டெலிவரி பாய் ஒருவரை இடித்துத் தள்ளி ஏற்படுத்திய விபத்துகள் குறித்த விபரங்களும் இணையத்தில் வைரலாகின.

நடுக்கடலில் சரக்கு பார்ட்டி

இந்நிலையில், பாலாஜி முருகதாஸின் இன்னொரு நடுக்கடல் சரக்கு பார்ட்டி வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. டிக்டாக்கில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் தான் இப்போ அவரை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகிறது. படகு ஒன்றில் சட்டையை கழட்டி விட்டு அவர் குடிக்கும் வீடியோவை வைரலாகி வருகிறது.

<!–

–>

பழி வாங்கும் சனம்

பழி வாங்கும் சனம்

பாலாஜி முருகதாஸின் பழைய லீலைகளை எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு வெளியே தனது ஆட்களை வைத்து கசியவிட்டு சனம் ஷெட்டி பழி வாங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் கூறி வாதாடி வருகின்றனர். மேலும், பாலாஜி எங்கேயும் தான் குடிக்கவே மாட்டேன்னு சொல்லவில்லையே என்றும் சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here