ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம்.. ஷூட்டிங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா.. குவாரைன்டனில் படக்குழு!

0
19
<!–

–>

மனித குலத்துக்கு சவால்

மனித குலத்துக்கு சவால்

11 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த நூற்றாண்டில், மனித குலத்துக்கு பெரிய சவாலாக இந்த வைரஸ் இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

<!–

–>

பெரும் அச்சுறுத்தல்

பெரும் அச்சுறுத்தல்

இந்த வைரஸுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், பெரிய அச்சுறுத்தலை இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறபிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். பின்னர், லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

<!–

–>

விரைவில் திறக்கப்படும்

விரைவில் திறக்கப்படும்

இதன் காரணமாக மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்ட சில படங்களின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகின்றன.

<!–

–>

ஹரிஷ் பெட்டி

ஹரிஷ் பெட்டி

அதில் ஒன்று நானி, ரிது வர்மா நடிக்கும் தெலுங்கு படமான டக் ஜகதீஸ். இதன் ஷூட்டிங் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி ஐதராபாத்தில் நடந்து வந்தது. ரொமான்டிக் கதையை கொண்ட இந்தப் படத்தை, சிவ நிர்வாணா இயக்குகிறார். சாஹு கரபடி, ஹரிஷ் பெட்டி தயாரிக்கின்றனர்.

<!–

–>

கொரோனா டெஸ்ட்

கொரோனா டெஸ்ட்

இதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெகபதி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ். தமன் இசை அமைக்கிறார். இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் சோதனை செய்து பார்த்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

<!–

–>

2K KIDS லாம் வேற லெவல் | ACTRESS SANDRIYA CHAT | FILMIBEAT TAMIL

நடிகை ரிது வர்மா

நடிகை ரிது வர்மா

இதனால் இந்த படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட, ஹீரோ நானி, நடிகை ரிது வர்மா உள்பட அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அதில் சிலர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here