உருவாகிறது, விமான விபத்தில் இறந்த பிரபல நடிகையின் பயோபிக்.. நம்ம ‘ரவுடி பேபி’ நடிக்கிறாராமே?

0
29
<!–

–>

கங்கனா ரனவத்

கங்கனா ரனவத்

இதில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து, இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் இந்தி நடிகை கங்கனா ரனவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். விஜய் இயக்குகிறார். அரவிந்த் சாமி, பூர்ணா, இந்தி நடிகை பாக்யலட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர்.

<!–

–>

சவுந்தர்யா பயோபிக்

சவுந்தர்யா பயோபிக்

இப்போது நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை, சவுந்தர்யா, கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறிய ‘பொன்னுமணி’ மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆர்.வி.உதயகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

<!–

–>

காதலா காதலா

காதலா காதலா

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கிலும் வாய்ப்புகள் அதிகரித்தன. தமிழில், சத்யராஜின் சேனாதிபதி, ரஜினிகாந்தின் அருணாச்சலம், கமல்ஹாசனின் காதலா காதலா, சிவாஜி, அர்ஜூன் நடித்த மன்னவரு சின்னவரு, ரஜினியின் படையப்பா உட்பட பல ஹிட் படங்களில் நடித்தார்.

<!–

–>

விமான விபத்து

விமான விபத்து

இந்தியில் அமிதாப்பச்சனுடன் சூர்யவன்சம் படத்திலும் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வலம்வந்த சவுந்தர்யா கடந்த 2004 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்காக, பிரசாரம் செய்ய சென்றபோது, விமான விபத்தில் இறந்து போனார். இது திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

<!–

–>

'ரவுடி பேபி' சாய் பல்லவி

‘ரவுடி பேபி’ சாய் பல்லவி

இந்நிலையில் இவர் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. நடிகை சவுந்தர்யாவாக நடிக்க, ‘ரவுடி பேபி’ சாய் பல்லவியிடம் பேசிவருவதாகவும் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவி வருகிறது. படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here