இந்த வாரம் வெளியேற போறது இவர் தான்.. ஃபைனலில் இந்த 4 பேரு தான்.. வைரலாகும் எவிக்ஷன் விவரம்?

0
26
<!–

–>

இந்த வாரம் இவங்கதான்

இந்த வாரம் இவங்கதான்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதல் வாரம் எவிக்‌ஷன் ஏதும் இல்லை. இந்த வாரம் நடிகை ரேகா தான் வெளியேற போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வரும் டேட்டா மூலம் தெரியவருகிறது. ஏற்கனவே நடிகை ரேகா அல்லது கேபி தான் வெளியேறுவார் என கணிக்கப்பட்ட நிலையில், ரேகா வெளியேறுவார் என்றே தெரிகிறது

<!–

–>

அடுத்த வாரம் யார்

அடுத்த வாரம் யார்

ரேகாவுக்கு அப்புறம் பிக் பாஸ் வீட்டில் ஓல்டு லேடியாக இருப்பது இந்த முன்னாள் மாடல் அழகி சம்யுக்தா தான். அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இவர் தான் வெளியேறப் போவார் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இவர் 21 நாட்கள் இருப்பார் என குறிப்பிடப்பட்டு இருப்பதால், சம்யுக்தா அடுத்த வாரம் வெளியேறுகிறாரா? என்பதை பார்ப்போம்.

<!–

–>

28வது நாள்

28வது நாள்

என்ன தொடர்ந்து இந்த பட்டியலில் லேடீஸ் போட்டியாளர்களாக வெளியேறுகிறார்கள். 4வது வாரம் நடிகை சனம் ஷெட்டி ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது தெரிகிறது. மூன்றாவது வாரமே எவிக்‌ஷன் ஆக வேண்டிய இவர், நேற்று வேல்முருகன் உடன் இணைந்து விளையாடி வென்றதால் 4வது வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

<!–

–>

கருப்பு காயினும் கூடவே போகுது

கருப்பு காயினும் கூடவே போகுது

சிகப்பு காயின் வெளியே போன உடனே 5வது வாரத்தில் நாட்டுப்புற பாடகர் குதிக்கும் மன்னன் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. சனம் ஷெட்டியை பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாமலே வெளியேற உள்ள வேல்முருகனுக்கு வீட்டுக்குப் போனதும் சரியான சரவெடி இருக்கும் என்பது உறுதி.

<!–

–>

என்டர்டெயின்மென்ட்டே வெளியேறுதே

என்டர்டெயின்மென்ட்டே வெளியேறுதே

வந்தவர்கள் எல்லாம் ஒரு நாள் போய் தான் ஆக வேண்டும், உலக வாழ்க்கையிலும் அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் அப்படித் தான். இந்த பிக் பாஸ் சீசனில் ரசிகர்களின் என்டர்டெயின்மென்ட்டாக இருந்து வரும் நம்ம மொட்டை பாஸ் சுரேஷ் 6வது வாரத்தில் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.

<!–

–>

அழகிய தமிழ் மகன்

அழகிய தமிழ் மகன்

அழகிய தமிழ் மகன் போட்டியில் கலந்து கொண்டு அமைதியாக பிக் பாஸ் வீட்டில் யார் வம்புக்கும் தும்புக்கும் போகாமல், சைலன்ட்டா அனிதாவை வனிதாவுடன் ஒப்பிட்டு, தோள் மேல தோள் போட்டுத் தோழனாய் சுற்றி வரும் சோமசேகர் 49வது நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவாராம்.

<!–

–>

ரவுடி பேபி

ரவுடி பேபி

பிக் பாஸ் வீட்டின் ரவுடி பேபியாக கலக்கி வரும் சுட்டிக் குழந்தை கேப்ரியல்லா பிக் பாஸ் வீட்டில் இருந்து 8வது வாரத்தில் தான் வெளியேற்றப்படுவார் என அந்த தகவல் தெரிவிக்கிறது. அப்போ கண்டிப்பா ஆஜீத்துடன் இவருக்கு ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

<!–

–>

அடுத்தது ஆஜீத்

அடுத்தது ஆஜீத்

கேபியே விட்டை விட்டு போய்விட்ட பிறகு, எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எனக்கு எதற்கு என ஆஜீத்தே விட்டுக் கொடுத்து விட்டு, வீட்டை விட்டு 9வது வாரத்தில் வெளியே வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இருவருக்குமே பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே ஒரு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.

<!–

–>

10வது வாரம் இவர்தானாம்

10வது வாரம் இவர்தானாம்

சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், இந்த சீசன் பிக் பாஸ் வீட்டில் 10 வாரங்கள் தாக்குப்பிடித்து இருப்பார் என்று தெரிகிறது. 10வது வாரத்தில் தான் அவர் வீட்டை விட்டு வெளியேறுவாராம். அதுவரை அனிதாவின் தரிசனம் அவரது ரசிகர்களுக்கு வித விதமாக கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது ஹேப்பியான விஷயம் தான்.

<!–

–>

ரகிட ரகிட ரகிட

ரகிட ரகிட ரகிட

11வது வாரம் பிக் பாஸ் வீட்டின் பாகுபலியையும் கெட் அவுட் பண்ணப் போறாங்களாம். என்னடா இந்த சீசன் டைட்டிலை பாலாஜி வின் பண்ணுவார் என எதிர்பார்த்த அவரது தீவிர ரசிகைகளுக்கு இந்த விஷயம் கொஞ்சம் ஏமாற்றத்தை தரவே செய்யும். என்ன தான் நடக்கப் போகுதுன்னு வெயிட் பண்ணி பார்ப்போம். போடு ரகிட.. ரகிட.. ரகிட!

<!–

–>

ஜித்தன் ரமேஷும் அவுட்

ஜித்தன் ரமேஷும் அவுட்

12வது வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் ஜித்தன் ரமேஷும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஏகப்பட்ட போட்டிகளில் செம டஃப் கொடுத்து விளையாட போகிறார் ஜித்தன் ரமேஷ் என்பதை நினைக்கும் போதே அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் தனியாக பொங்கத்தான் செய்யும்.

<!–

–>

மாஸ்டர் ஆரி

மாஸ்டர் ஆரி

பிக் பாஸ் வீட்டில் ஒழுக்கத்தையும், ஒர்க்கவுட்டையும் சொல்லிக் கொடுத்து வரும் மாஸ்டராக இருக்கும் ஆரி அர்ஜுனாவும் இந்த சீசன் டைட்டிலை தட்டிச் செல்ல மாட்டார் என்கிற தகவல் வருத்தத்தை தந்தாலும், விளையாட்டுல இதெல்லாம் சகஜம் தான் என்றே தோன்றுகிறது. ஆரி எப்படி எவிக்ட் ஆகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

<!–

–>

தலைவி ரம்யா

தலைவி ரம்யா

கடும் போட்டியாளராக இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் போராடி மைண்ட் கேமில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அல்வா கொடுத்துவிட்டு ஆடி வரும் தலைவி ரம்யா பாண்டியனும், 98வது நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கணிக்கப்பட்டு இருக்கிறது. அப்போ யார் தான் பா டைட்டில் வின் பண்ண போறாங்க என்கிற ஆவலும் அதிகரிக்கத்தான் செய்கிறது.

<!–

–>

இந்த நாலு பேரும் தான்

இந்த நாலு பேரும் தான்

பிக் பாஸ் தமிழ் 4வது சீசன் ஃபைனலுக்கு ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், அறந்தாங்கி நிஷா மற்றும் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்துள்ள அர்ச்சனா ஆகிய 4 பேரும் தான் போகப் போறாங்களாம். இவர்கள் 4 பேரில் ஒரு பெண் போட்டியாளர் தான் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்வார் என கெஸ் செய்யப்படுகிறது.

<!–

–>

நம்பலாமா

நம்பலாமா

அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு எல்லாம் என முணுமுணுக்கத் தான் தோன்றுகிறது. தற்போது வெளியாகி உள்ள கெஸ்ஸிங் பட்டியல் கெஸ்ஸிங் போட்டியாளர்கள் லிஸ்ட் போலவே உண்மையாகி விடுமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது. இந்த வரிசைப்படியே போட்டியாளர்கள் வெளியேறுகிறார்களா? இல்லை இதுவும் ஒரு டுபாக்கூர் கணிப்பா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here