இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. மொட்டை அங்கிளை கட்டம் கட்டும் ரியோ.. வெளியானது அதிரடி புரமோ!

0
27
<!–

–>

ஃபிரி பாஸ் டாஸ்க்

ஃபிரி பாஸ் டாஸ்க்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக உள்ளது. அதாவது எவிக்ஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்கின் போது, தனது தரப்பு வாதத்தை சொல்ல வீட்டிற்குள் குரூப்பிசம் இருப்பதாக கூறினார்.

<!–

–>

டிவியில் ஒளிபரப்பிய பிக்பாஸ்

டிவியில் ஒளிபரப்பிய பிக்பாஸ்

மேலும் தான் கார்னர் செய்யப்படுவதாக கூறிய சுரேஷ், அதற்கு எடுத்துக்காட்டாக பிக்பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களை கூறினார். இந்தக் காட்சிகள் அனைத்தும் பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

<!–

–>

வேல்முருகன் ஆவேசம்

வேல்முருகன் ஆவேசம்

இதனை பார்த்த ரியோ, அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் கொந்தளித்தனர். அதோடு வெளியே வந்த சுரேஷ் சக்கரவர்த்தியையும் அவர்கள் கட்டம் கட்டினர். வேல்முருகன், சுரேஷ் சொன்னதை புரிந்து கொள்ளாமல் லபோ திபோ என்று கத்தி ஆவேசப்பட்டார்.

<!–

–>

முகத்திரை கிழிக்கப்பட்டது

முகத்திரை கிழிக்கப்பட்டது

ரியோ, பக்கா குரூப்பிசம் செய்தார். அனிதா, சனம் ஷெட்டி, ரியோ என ஆளாளுக்கு அவரவர் பங்குக்கு சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்தனர். இதன் மூலம் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக புரமோ வெளியாகியுள்ளது.

<!–

–>

குரூப்பிசம் இருக்கு..

குரூப்பிசம் இருக்கு..

அந்த புரமோவில் லிவிங் ஏரியாவில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் குரூப்பிஸம் இருக்கு என்று சொன்னது குறித்து கெடுபிடியாக விசாரிக்கிறார். அதற்கு ஆமாம் பேர் சொல்ல விரும்பல.. நிறைய குரூப்பிஸம் இருக்கு என்கிறார் சுரேஷ். என்னைதான் சொல்கிறீர்கள் என்று பச்சையாக தெரிகிறது என எகிறுகிறார் ரியோ.

<!–

–>

வீக் ஆக்கவில்லை

வீக் ஆக்கவில்லை

உடனே குரூப்பிசம் இருக்குன்னு நான் நினைக்கிறேன்னு நீங்க சொல்றீங்கள்ல என விஷயத்தை விளக்க ஆரம்பிக்கிறார். நீங்களும் நிஷாவும் வெளியே இருந்தே ஃபிரண்ட்ஸ்.. நீங்கள் எல்லோரும் செய்த எதுவும் என்னை வீக் ஆக்கவில்லை என்கிறார் சுரேஷ்.

<!–

–>

இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

அதற்கு வழக்கம் போல் தனது முகத்தை டெரராக வைத்துக்கொண்டு நாங்கள் எல்லோரும் உங்களை என்ன செய்தோம் என கேட்கிறார் ரியோ. இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னுமாடா அந்தப் பஞ்சாயத்து தீரவில்லை என கேட்டு வருகின்றனர்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here