இதுதான் உங்களுக்கு கடைசிப் படம்.. விஜய் சேதுபதிக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

0
23
<!–

–>

800 விக்கெட்டுகள்

800 விக்கெட்டுகள்

இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். ‘800′ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. 800 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால் இந்தப் படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

<!–

–>

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியானபோதே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டன.

<!–

–>

ராஜபக்சேவுக்கு ஆதரவு

ராஜபக்சேவுக்கு ஆதரவு

காரணம்.. முத்தையா முரளிதரன் ஒரு தமிழர் என்றாலும், சிங்களர்களுக்கு ஆதரவானாவர். குறிப்பாக ஈழ்த் தமிழர்களை கொன்றுவித்த ராஜபச்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க தமிழ் அமைப்புகளும் ஈழத் தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

<!–

–>

எதிர்ப்பு குரல்கள்

எதிர்ப்பு குரல்கள்

இந்நிலையில் 800 படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போலவே உள்ளார் விஜய் சேதுபதி என்ற கருத்துகள் எழுந்த நிலையில், அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிராக குரல்கள் வலுத்துள்ளன.

<!–

–>

இதுதான் கடைசிப் படம்

இதுதான் கடைசிப் படம்

சமூக வலைதளங்களிலும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்துவரும் நெட்டிசன்கள், இந்தப் படம்தான் உங்களின் கடைசி படம் என்றும் ஏற்றிவிட்ட தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யாதே என்றும் விஜய் சேதுபதியை விளாசி வருகின்றனர்.

<!–

–>

மானக்கேடு ஏதும் இல்லை

மானக்கேடு ஏதும் இல்லை

விஜய் சேதுபதியின் நடவடிக்கையால் கொந்தளித்துப் போயுள்ள இந்த ரசிகர், சிங்கள கொடியோடு தமிழ் நாட்டுல இந்த படம் வெளியாகிட்டா.. இத விட மானக்கேடு ஏதும் இல்லை.. இன்னும் வெறியோடு டேக் செய்யுங்கள் என டிவிட்டியுள்ளார்.

<!–

–>

துரோகம் செய்யாதே

துரோகம் செய்யாதே

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், ஏற்றிவிட்ட எம் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யாதே என விஜய் சேதுபதியின் டிவிட்டர் ஹேண்டிலுக்கு டேக் செய்துள்ளார்.

<!–

–>

எதிர்ப்போம்

எதிர்ப்போம்

மற்றொரு நெட்டிசனான இவர் உங்களின் நடிப்பு இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாதத்திற்கு வலு சேர்க்கும்…சிங்கள ,பௌத்த பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்!! என எச்சரித்துள்ளார்.

<!–

–>

மனிதனா இல்லையா?

மற்றொரு நெட்டிசனான இவர், நீங்கள் நல்லவன் இல்லை என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். மனிதாபிமானமுள்ள எவனும் தமிழினத்தை இழிவுபடுத்திய முத்தையா முரளிதரன் கதையில் நடிக்க மாட்டார். நீங்க எப்படி மனிதனா இல்லையா ?? என கேட்டுள்ளார்.

<!–

–>

உனக்கு தேவையா?

உனக்கு தேவையா?

மற்றொரு நெட்டிசனான இவர், ஈழத் தமிழர்கள் நிர்வாணமாக கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட ஓவியத்தை ஷேர் செய்து, இந்த வலியை தமிழர் அனுபவித்தது தனக்கு மகிழ்வை கொடுத்தது என்று பேசிய துரோகி முரளியின் பணம் உனக்கு தேவையா ?? என கேட்டுள்ளார்.

<!–

–>

துடைத்தெறிந்துவிட்டார்

துடைத்தெறிந்துவிட்டார்

மற்றொரு நெட்டிசனான இவர், விஜய் சேதுபதி, இதுவரை மேடைகளில் பேசிய அன்பு, மனித நேயம், நீதி போன்ற அனைத்து வார்தைகளின் பொருளையும் ஒரே படப் போஸ்டரில் துடைத்தெறிகிறார் என காட்டமாக கூறியுள்ளார்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here