அடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா!

0
31

ஷூட்டிங் ஓவர்

ஷூட்டிங் ஓவர்

மனோபாலா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். 7 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி முடிவடைந்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ்

தீபாவளிக்கு ரிலீஸ்

இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளனர். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று விஷால் ஏற்கனவே கூறியிருந்தார். இது தொடர்பாக சில ஓடிடி தளங்களில் அவர் பேசி வருகிறார். இதற்கிடையே அடுத்த படத்தை விரைவில் தொடங்க இருக்கிறார். இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

எதிரியான ஆர்யா

எதிரியான ஆர்யா

இவர், விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுருகன், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா, அவருக்கு எதிரியாக நடிக்கிறார். அவர் வில்லனாக நடிப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிருணாளினி ரவி

மிருணாளினி ரவி

விஷால் ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள மிருணாளினி, தமிழில் எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங், வரும் 15 ஆம் தேதிக்குப் பிறகு சென்னையில் தொடங்க இருக்கிறது. இது வித்தியாசமான ஆக்‌ஷன் படம் என்று கூறப்படுகிறது. வினோத்குமார் தயாரிக்கிறார்.

துப்பறிவாளன் 2

துப்பறிவாளன் 2

இந்தப் படத்துக்குப் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கினார். விஷால், தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் தயாரித்து வருகிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மிஷ்கின் விலகினார். இதனால் விஷாலே அந்த படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார்.

SEMrush

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here